ஹேக்கர்களிடம் மண்டியிட்டது Uber நிறுவனம்: செலுத்திய பணம் எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

Uber எனப்படுவது சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும்.

இது உலகளவில் 633 நகரங்களில் ஒன்லைன் மூலமான வாகன போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந் நிறுவனத்தின் பயனர்கள் மற்றும் சாரதிகள் தொடர்பிலான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டது.

இதனால் Uber நிறுவனம் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறைய ஆரம்பித்ததுடன் பல பிரச்சினைகளுக்கும் அந் நிறுவனம் முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

திருடப்பட்ட தகவல்களில் 57 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் 600,000 சாரதிகள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் உட்பட தொலைபேசி இலக்கங்களும் உள்ளடங்கும்.

திருடப்பட்ட இந்த தகவல்களை முற்றாக அழிப்பதற்கு ஹேக்கர்களுக்கு பணம் செலுத்த Uber நிறுவனம் முன்வந்துள்ளது.

இதன்படி 100,000 அமெரிக்க டொலர்களை செலுத்தவுள்ளது.

இதன் பின்னர் Uber ஒன்லைன் சேவையில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கியதாக மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்