ஆப்பிள் வழங்கும் பரிசுப் பொதிகளை வாங்க நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
105Shares
105Shares
ibctamil.com

Black Friday தினத்தினை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி திக்குமுக்காடச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

இந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.

எனினும் தனது ஸ்டோரில் சாதனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கே இந்த பரிசுப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அதிக பட்சமாக 150 டொலர்கள் பெறுமதியான பரிசுப் பொதியினை ஆப்பிள் நிறுவனம் வழங்குகின்றது.

இதன்படி iMac, Mac Pro, MacBook, MacBook Pro, மற்றும் MacBook Air ஆகியவற்றினை கொள்வனவு செய்பவர்களுக்கு 150 டொலர் பரிசுப் பொதியும், iPad Pro கொள்வனவு செய்பவர்களுக்கு 100 டொலர்களம், Phone 6s, 6s Plus, iPhone 7, 7 Plus, 5th-Generation iPad, iPad Mini 4 ஆகியவற்றினை கொள்வனவு செய்பவர்களுக்கு 50 டொலர் பரிசுப் பொதியும், iPhone SE கொள்வனவு செய்பவர்களுக்கு 25 டொலர் பரிசுப் பொதியினையும் வழங்குகின்றது.

இந்த சலுகையினை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட மேலும் சில நாடுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்