400 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த ஏர் இந்தியா

Report Print Kabilan in நிறுவனம்
11Shares
11Shares
ibctamil.com

ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ளதால், முதற்கட்டமாக 400 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் தொழில்நுட்ப பிரிவைச் சாராதவர்கள் என தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஓய்வுபெற்ற பணியாளர்களை பணியில் அமர்த்தும் ஒப்பந்தங்களை கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதி அளித்தது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 5ஆம் திகதி தொழில்நுட்ப பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த பணியாளர்களை ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், பணியாளர்கள் ஓய்வுபெற்ற பிறகு, ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் அவர்கள் அனைவரும் நீக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த பணியாளர்கள் அனைவரும், ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர் லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா பொறியியல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.

இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னால் தலைவரான ராஜிவ் பன்சால், கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக ஓய்வுபெற்றவர்களைத் தற்காலிகமாகப் பணிக்கு எடுப்பதைத் தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்