உலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை

Report Print Kabilan in நிறுவனம்
28Shares
28Shares
lankasrimarket.com

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், உலகிலேயே முதல் முறையாக ‘Jio Interact' எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சேவையை துவங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘Jio Interact' எனும் தளத்தை துவங்கியுள்ளது. இதன்மூலம் நேரலையில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஜியோ செயலியில் ஏற்கனவே HD வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளூம் வசதி வழங்கப்படும் நிலையில், புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ அழைப்புகள் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறுகையில், ‘Jio Interact' தளத்தில், இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ Call செய்ய முடியும். இவர் ‘102 Notout' திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்பரப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் கூறுகையில் ’ஜியோ 18.6 கோடி வாடிக்கையாளர்களையும், சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களையும் கொண்டிருக்கிறது. செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தும் ஜியோவின் புதிய தளம் உலகில் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோவின் புதிய சேவை, வாடிக்கையாளர்களின் கேள்விகளை மிக உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு சரியாக பதில் அளிக்கும்.

அத்துடன் அதிக கேள்விகளை கேட்கும் போது, கேள்விகளில் இருந்து பாடம் கற்கும் முறையை Jio Interact கொண்டிருக்கிறது. காலப்போக்கில் இது பதில்களை மிகவும் நேர்த்தியாக வழங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘Jio Interact' தளத்தில் Video call centers, Video Catelogue, Virtual Showroom உள்ளிட்டவற்றையும் சேர்க்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

My jio செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள Jio Interact சேவையை Click செய்து வீடியோ அழைப்பை பயன்படுத்தலாம். மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ Call அனுபவத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் Share option மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்