முதன் முறையாக விண்வெளி நிறுவனத்தினை நிர்மாணிக்கும் அவுஸ்திரேலியா

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
முதன் முறையாக விண்வெளி நிறுவனத்தினை நிர்மாணிக்கும் அவுஸ்திரேலியா
23Shares
23Shares
lankasrimarket.com

விண்வெளி ஆய்வுகள் தொடர்பில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

எனினும் அவுஸ்திரேலியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இதனை உணர்ந்த அவுஸ்திரேலிய அரசு விண்வெளி நிறுவனம் ஒன்றினை உருவாக்க முன்வந்துள்ளது.

இதற்கு ஆரம்ப கட்டமாக 38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதியினை ஒதுக்கியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு Megan Clark எனும் பெண்மணி தலைமை தாங்கவுள்ளார்.

இவர் அவுஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் தலைமை அதிகாரியாக ஏற்கணவே பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமன்றி அவுஸ்திரேலிய அரசினால் உருவாக்கப்பட்ட விண்வெளி நிறுவனம் தொடர்பான தகவல் சேகரிக்கும் நிபுணர் குழுவிற்கும் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்