ஆப்பிள் நிறுவனத்தினை முறியடிக்க மைக்ரோசொப்ட்டின் திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
80Shares
80Shares
lankasrimarket.com

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழு ஒன்று மிகக் குறைந்த விலையில் டேப்லட்டினை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்களுக்கு அமோக வரவேற்பு காணப்படுகின்றது.

இதனை முறியடிக்கும் வகையிலேயே குறைந்த விலையில் Surface டேப்லட்டினை அறிமுகம் செய்ய மைக்ரோசொப்ட் தீர்மானித்துள்ளது.

இவ் வருடத்தின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் இந்த டேப்லட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த டேப்லட்டின் எடையும் ஏனைய டேப்லட்களை விடவும் 20 சதவீதம் குறைவாக இருக்கும் எனவும், மின்கலமானது 13.5 மணித்தியாலங்கள் மின் சக்தியை வழங்கக்கூடியதாகவும் இருக்கும்.

எனினும் இதன் விலை எவ்வளவாக இருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்