மிகப்பெரிய மைல்கல்லை எட்டியது அமேஷான் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகெங்கிலும் காணப்படும் முன்னணி நிறுவனங்களினதும் மதிப்பு விரைவாக அதிகரித்து வருகின்றது.

இந்த வரிசையில் உலகிலேயே முதன் முதலாக 1 ட்ரில்லியன் பெறுமதியைக் கொண்ட நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் அண்மையில் இடம்பிடித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமான ஒன்லையின் வியாபாரத்தளமான அமேஷனும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

நேற்றைய தினமே இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது 100 மில்லியன் வரையான சந்தா செலுத்தும் பயனர்களை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers