முதன் முறையாக இந்தியாவில் புதிய சரித்திரம் படைத்தது மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

மைக்ரோசொப்ட்டின் இந்திய கிளையானது வரலாற்றில் முதன் முறையாக ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்களின் ஆய்வு நிறுவனமாக திகழும் Tofler இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமேஷான் மற்றும் கூகுளுடன் கடும் போட்டியாக திகழும் நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இச் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

கிவுட் கணினி மற்றும் கிளவுட் கணினியை அடிப்படையாகக் கொண்ட சேவைகள் மூலமே இச் சாதனை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு கடுமையான கட்டளை ஒன்றினை பிறப்பித்துள்ளது.

அதாவது பின்வரும் சேவைகளை அவர்கள் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதன்படி Slck Free, Slack Standard, Slack Plus, Google Docs, Kaspersky, Amazon Web Services, GitHub, PagerDuty மற்றும் Grammarly என்பவற்றினை மைக்ரோசொப்ட் பணியாளர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்