புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் மல்லையா: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் மல்லையா: விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார்.

இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக ‌உள்ள நிலையிலும், மற்ற உ‌ரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டுள்ள சம்மதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments