இப்படியுமா ஆட்டமிழப்பார் இந்த யுவராஜ் சிங்? புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
இப்படியுமா ஆட்டமிழப்பார் இந்த யுவராஜ் சிங்? புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்த விதம் ரசிகர்கள் அனைவரையும் வெறுப்படையச் செய்துள்ளது.

காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஆரம்பத்தில் இருந்து விலகி இருந்த யுவராஜ் சிங், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கியதால் அவர் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தொடர்ந்து தடுமாறிய யுவராஜ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தப் போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடிய யுவராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

23 பந்தில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரி என 39 ஓட்டங்கள் குவித்தார். இதனால் ஐதராபாத் அணி 177 என சிறப்பான ஓட்டங்களை குவித்து மும்பை அணிக்கு நெருக்கடிகொடுத்தது.

இருப்பினும் யுவராஜ் சிங் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக அமைந்தது. கடைசி ஓவரில் 4வது பந்தை மும்பை பந்துவீச்சாளர் மெக்லெனகான் வைடாக வீசினார்.

அதை அடிக்க முயன்ற யுவராஜ் தனது துடுப்பாட்ட மட்டையால் ஸ்டெம்பை தட்டிவிட்டார். இதைத் தொடர்ந்து ஹிட் விக்கெட்டாக வெளியேறினார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஹிட் விக்கெட்டாக ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் யுவராஜ் சிங் 5வது வீரராக இணைந்துள்ளார்.

தவிர, இந்தப் போட்டி யுவராஜ் சிங்கிற்கு 100வது ஐபிஎல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments