பழைய காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் டோனி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
பழைய காதலியை  மறக்க முடியாமல் தவிக்கும் டோனி
967Shares

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான மஹேந்திரசிங் டோனி தன்னுடைய பழைய காதலியை இன்னும் மறக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடித்தந்தவர் டோனி, அவரைப் பற்றிய சில சுவாரஸிய தகவல்கல் வெளியாகியுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு, கடந்த 2002 ம் ஆண்டுகளில் பிரியங்கா ஜா என்ற பெண்ணை டோனி காதலித்ததாகவும், இவர் தான் தன் மனைவி என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் தெரிகிறது.

2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றவருக்கு, தேசிய அணியிலும் இடம் கிடைத்தது, அத்தொடர் முழுவதும் டோனி சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் தொடர் முடிந்து வீடு திரும்பியதும் அதிர்ச்சி காத்திருந்தது, இவர் காதலித்த பெண் விபத்தில் உயிரிழந்தார் என்ற தகவல் அவருக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த டோனி பல மாதங்களாக தன்னுடைய காதலியின் நினைப்பில் இருந்துள்ளார்.

அதன் பின் 2004 ம் ஆண்டு வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார், கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய டோனி 2010 ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்தார்.

டோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி’ என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது, இப்படத்தில் தன்னுடைய காதலியின் நினைவுகளை படமாக்க அனுமதி தந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments