இந்திய அணியை மிரட்ட வருகிறார் அல்சாரி ஜோசப்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை மிரட்ட வருகிறார் இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் வரும் 30ம் திகதி நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணியின் வீரர்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியில் புதிதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளதாக மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 19 வயதான ஜோசப் 8 முதல்தர போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 5 விக்கெட்கள் விழ்த்தியுள்ளார்.

நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

மேலும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் விழச்செய்தவர்.

ஆண்டிகுவாவில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவு பவுன்ஸ் செய்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை மிரட்டினர்.

சிறப்பாக பவுன்ஸர் செய்யும் ஜோசப் இதன் காரணமாக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கலாம், மேலும் ஜோசப் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments