ஒரே ட்வீட்டில் இரண்டு பேருக்கு செம பல்பு கொடுத்த பலே சேவாக்! அந்த இரண்டு பேர் யார்?

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய ஒலிம்பிக் பதக்கங்களை குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து பல கோடி இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன்.

ஆனால், இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் கொடுத்த பதிலடியோ இந்தியர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அன்று முதல் பியர்ஸ் மார்கன் டுவிட்டரில் சேவாக்கிடம் தொடர்ந்து பல்பு வாங்கி வருகிறார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி டுவிட்டரில் சேவாக்கிற்கு ஒரு அழைப்பு விடுத்தார். அது தனது தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவை குறித்து ஆங்கிலேயர் பார்வை பற்றி உரையாற்றும் படி கோரியுள்ளார்.

இதற்கு சேவாக்கின் பதில் ட்வீட்டே, அவர்களுக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரத்தை செலவிட தேவையில்லை எனக் கூறி மறுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments