இப்படியெல்லாம் நடக்குமா? ஜெயவர்த்தனேவுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே விமானப் பணிப்பெண்ணான கிறிஸ்டினியா மல்லிகா சிறிசேனா என்பவரை காதலித்து 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காதலித்த காலத்தில் ஜெயவர்த்தனே கிரிக்கெட்டிலும், மல்லிகா தனது வேலையிலும் பிஸியாக இருந்தனர்.

இந்த நிலையில் ஜெயவர்த்தனே சுற்றுப்பயணத்தில் இருந்த போது மல்லிகா அவரின் பிறந்த நாளை ஜெயவர்த்தனேவின் வீட்டிலே கொண்டாடி இருக்கிறார்.

பின்னர் இது தொடர்பான தகவலை டென்மார்க்கில் உள்ள தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது தனக்கும் அதே தினத்தில் தான் பிறந்த நாள் என்று அவரது பாட்டி மல்லிகாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் வியப்பில் இருந்த மல்லிகாவுக்கு மீண்டும் பாட்டியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் ’அதேபோல் உனது பிறந்த தினமும் உனது தாத்தாவின் பிறந்த தினமும் ஒரேநாள்’என்று வந்திருந்தது. அதெப்படி இது போன்று நடக்கும் என்று மல்லிகா வியப்பில் உறைந்து போனாராம்.

இந்த தகவலை ஜெயவர்த்தனேவிடம் அவர் தெரிவிக்க இது நம்பமுடியாத படி உள்ளதாக அவரும் வியந்து போனாராம். இந்த சுவாரஸ்ய தகவலை ஒரு பேட்டியின் போது மல்லிகா தெரிவித்திருந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments