இனிமேல் எல்லாமே சங்ககாரா தான்: நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தான் இனிமேல் எல்லாம் என பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் சங்ககாரா. இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து உள்ளூரில் நடக்கும் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள், பிக் பாஷ் போட்டிகள் என பல போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவரின் ஆட்டமும் திறமையும் மாறவில்லை அதன் காரணமாகவே வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சங்ககாராவை அந்நாட்டு அணியினர் முந்திக் கொண்டு எடுக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐபில் போட்டிகளைப் போல பல நாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போல் ஒரு தொடரை பாகிஸ்தான் அணியும் அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள அணிகளில் கராச்சி அணி சார்பாக இலங்கை வீரர் ஜெயவர்தனே, சங்ககாரா மற்றும் மேற்கிந்தியதீவு அணியின் கிறிஸ்கெய்லும் விளையாட உள்ளனர்.

கராச்சி அணிக்கு கடந்தாண்டு வரை பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த சோயிப் மாலிக் தான் தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இந்தாண்டு நடக்கும் PSL போட்டியில் கராச்சி அணியின் தலைவராக சங்ககார நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அவர் மீது நம்பிக்கை உள்ளது எனவும், அவர் தான் காராச்சி அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்லவேண்டும் என்றும் இனிமேல் அவர் தான் அணிக்கு எல்லாம் என மாலிக் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments