இந்திய அணியை கிண்ணத்தை வெல்ல விடமாட்டோம்: அடித்து சொல்லும் ஸ்டார்க்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியை கிண்ணத்தை கைப்பற்றவிட மாட்டோம் என்று அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

இதில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறுகையில், கடந்த முறையைப்போல இல்லாமல், இந்த ஆண்டு எல்லா வீரர்களும் புது உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளனர்.

அதனால் இந்த தொடரை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டோம். மற்ற அணிகளை விட இந்திய அணி தான் வெற்றி பெற கொஞ்சம் கடினமான அணி. இந்த ஆண்டு, இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றுவது கடினமான விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments