முதன்முறையாக இலங்கை அணி சந்திக்கவிருக்கும் சவால் இதுதான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை விளையாடவுள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது குறித்து அணித்தலைவர் சண்டிமால் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 28ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் அக்டோபர் 6ஆம் திகதி பகல்- இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இலங்கை அணி முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகளை பயன்படுத்துவார்கள், ஆனால் நடக்கவிருக்கும் பகல் இரவு போட்டியில் வெளிச்சம் சம்மந்தமான விடயங்கள் காரணமாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தவுள்ளார்கள்.

இதுகுறித்து இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கூறுகையில், கடந்த உள்ளூர் போட்டியின் போது பிங்க் நிற பந்தில் விளையாடியுள்ளோம்.

சிவப்பு நிற பந்துகளை விட பிங்க் நிற பந்துகள் முற்றிலும் வேறுபாடு கொண்டதாகும்.

இரவு விளக்கு வெளிச்சத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு பிங்க் நிற பந்தை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கும்.

சிவப்பு நிற பந்தின் சுழற்சியை விட பிங்க் நிற பந்தின் சுழற்சி குறைவானதாக இருக்கும் என தான் கருதுவதாக சண்டிமால் கூறியுள்ளார்.

இதனிடையில், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் பிங்க் நிற பந்தில் விளையாட சிறப்பு பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்படும் என அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers