யோ- யோ டெஸ்ட்டை ஊதித்தள்ளிய அஸ்வின்

Report Print Santhan in கிரிக்கெட்
454Shares
454Shares
lankasrimarket.com

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யோ யோ டெஸ்ட்டை ஊதித்தள்ளிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

அதை நிரூபிக்கும் வகையில், அஸ்வின் சமீபத்தில் வாய்ப்புகள் என் வீட்டுக்கதவை தானாக வந்து தட்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், பெங்களூருவிக்கு ஒரு நல்ல பயணம் சென்றேன். அதில் யோ-யோ டெஸ்ட்டை தூசியாக ஊதிவிட்டேன். தற்போது ரஞ்சியில் விளையாடவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்திய அணி தேர்வில் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறுபவர்களே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்று தேர்வு குழு தெரிவித்திருந்தது.

தற்போது அஸ்வின் அந்த டெஸ்டில் தேர்ச்சி ஆகியுள்ளதால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்