இலங்கை அணி எங்கள் அறிவு கண்ணை திறந்து விட்டது: ரோகித் குமுறல்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணி எங்கள் அறிவு கண்ணை திறந்துவிட்டதாக, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையேய நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், இந்திய அணியை ஆட்டம் காண வைத்துவிட்டனர்.

இந்நிலையில் இப்போட்டி குறித்து இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறுகையில், நாங்கள் துடுப்பாட்டத்தில் கோட்டைவிட்டுவிட்டோம்.

70-முதல் 80-ஓட்டங்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம், எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் முயன்ற அளவிற்கு முயற்சி செய்தனர், எப்போதும் மட்டைப் பிட்சில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது, இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி எங்கள் அறிவு கண்ணை திறந்துவிட்டது.

இது போன்ற சூழ்நிலைகளின் போது எப்படி ஆட வேண்டும் என்று டோனிக்கு தெரியும், அவர் நன்றாக ஆடினார்.

அவருக்கு இணையாக ஒருவர் விளையாடியிருந்தால் ஓட்டமும் அதிகரித்திருக்கும், முடிவும் மாறியிருக்கும்.

இருப்பினும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளதால், இதிலிருந்து மீண்டு, அந்த இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...