புதிய சாதனை படைத்த விருத்திமான் சாஹா

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 10 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா, 10 கேட்சுகள் பிடித்துள்ளார்.

இதன்மூலம், 2014ஆம் ஆண்டு நடந்த மெல்போர்ன் டெஸ்டில் மகேந்திர சிங் டோனி 9 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். அதில் 8 கேட்சுகள் மற்றும் 1 ஸ்டம்பிங் அடங்கும்.

டோனியின் இந்த சாதனையை சாஹா தற்போது தகர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள்:

ஜாக் ரஸல் - 11 (தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக, 1995)

டிவில்லியர்ஸ் - 11 (பாகிஸ்தானுக்கு எதிராக, 2013)

பாப் டெய்லர் - 10 (இந்தியாவுக்கு எதிராக, 1980)

ஆடம் கில்கிறிஸ்ட் - 10 (நியூசிலாந்துக்கு எதிராக, 2000)

விருத்திமான் சாஹா - 10 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2018)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்