சர்ச்சைக்குள்ளான விக்கெட்டால் பரபரப்பான பிக்பாஷ் தொடர்

Report Print Kabilan in கிரிக்கெட்
232Shares
232Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் தொடரின் போட்டியில் துடுப்பாட்ட வீரர் ஒருவரின் விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் போலவே, அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் தொடர் மிகவும் பிரபலமாகும். இத்தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

இந்நிலையில், பிரிஸ்போர்ன் ஹீட் அணியும், ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த ஆட்டத்தில், பிரிஸ்போரின் அலெக்ஸ் ரோஸ் 19 பந்துகளில் 27 ஒட்டங்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால், அதனை பீல்டர் ஒருவர் தடுத்து, ஸ்டெம்பை நோக்கி எறிந்தார்.

அப்போது, இரண்டாவது ஒட்டத்திற்காக ஓடிக்கொண்டிருந்த ரோஸின் உடலில் பட்டு பந்து ஸ்டெம்பை தாக்கியது. எனினும், அவர் எல்லைக் கோட்டை தொட்டுவிட்டார்.

இதன் பின்னர், ஹோபார்ட் அணி வீரர்கள் விக்கெட் கேட்டு நடுவரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது குழம்பிப் போன கள நடுவர், 3வது நடுவரிடம் ஆலோசனை கேட்டார்.

3வது நடுவர் உடனே விக்கெட் என்று அறிவித்தார். ஆனால், ஸ்டெம்பை பந்து தாக்கியதற்காக இல்லாமல், பந்தை ரோஸ் தடுத்தார் என்பதற்காகவே விக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஷ் தொடரின் வரலாற்றிலேயே இந்த விக்கெட் கொடுக்கப்பட்டது, இதுதான் முதல் முறையாகும்.

இந்நிலையில், இந்த விக்கெட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவானான விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறுகையில்,

‘பந்து ஸ்டெம்பில் இருந்து 3 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் பந்து ஸ்டெம்பை தாக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு, இடைஞ்சல் என்று கூறி விக்கெட் கொடுக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்