நேர்மைக்கு எடுத்துக்காட்டு டிராவிட் தான்: அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் நெகிழ்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டில், நேர்மைக்கு எடுத்துக்காட்டாக என்றும் என் நினைவில் வருபவர் ராகுல் டிராவிட் தான் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி புகழ்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள மைக் ஹசி, இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘ராகுல் டிராவிட் என்றாலே, என் மனதிற்குள் வருவது அவர் அடித்த 28 சதங்கள் தான். இது எனக்கு என்றும் ஆச்சரியத்தையே அளிக்கும்.

அதேபோல், டிராவிட் என்றால் அவர் ஒரு சுவர், துடுப்பாட்ட உத்திகளைச் சிறப்பாக கையாளுபவர் என்பதெல்லாம் என நினைவில் வராது. கிரிக்கெட்டை அவர் மிக நேர்மையாக ஆடினார் என்பதுதான் என் நினைவில் நிற்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், ’அவுஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம்.

பந்தைச் சேதப்படுத்திய காரணத்தினால் மட்டும் அவுஸ்திரேலிய அணி தலைப்புச் செய்தியாவது முதல் முறை அல்ல.

இனி வரும் நாட்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகக் கடினமானதாகவே இருக்கும். எனினும், இந்த சர்ச்சை சம்பவத்தினால் அணி தன்னை மறு ஆய்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

SG

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்