ருத்ர தாண்டவமாடிய கெயில்: பஞ்சாபிடம் வீழ்ந்தது சென்னை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
504Shares
504Shares
ibctamil.com

பஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் கெயிலில் ஆக்ரோஷ ஆட்டத்தால் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தெரிவுவு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ஓட்டங்களை கடந்தது.

37 ஓட்டங்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ஓட்டங்களிலும், முரளி விஜய் 12 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.

அவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர்.

கடைசி 5 ஓவர்களில் 76 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ஓட்டங்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய டோனி அரை சதமடித்தார்.

அடுத்து பிராவோ இறங்கினார். டோனி தனது அதிரடியை தொடர்ந்தார். கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 12 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து, வெறும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்