அந்த கேட்ச் பிடித்திருந்த சென்னை போட்டி மாறியிருக்குமே? புலம்பிய ராஜஸ்தான் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
344Shares
344Shares
ibctamil.com

சென்னை அணிக்கெதிரான போட்டியில் ஷேன் வாட்சன் கொடுத்த கேட்சை தவறவிட்டது அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

சென்னை-ராஜஸ்தான் அனிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டதே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று டோனி கூறியிருந்த நிலையில், அந்த ஒரு கேட்சை பிடித்திருந்தால் போட்டி மாறியிருக்க வாய்பிருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் ரகானே கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சென்னை அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியான அணி, இன்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

குறிப்பாக வாட்சன் அற்புதமாக விளையாடினார். அவரின் முந்தைய ஆட்டத்திற்கும் தற்போதைய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் பட்டையை கிளப்புகிறார். பந்து வீச்சில் நாங்களை நிறைய தவறுகள் செய்தோம், பீல்டிங்கிலும் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை, ஆனால் இதற்கு அப்படியே எதிராக சென்னை அணி வீரர்கள் பீல்டிங், பந்து வீச்சு என கலக்கினர்.

இப்போட்டியின் போது ஷேன் வாட்சன் கொடுத்த கேட்டை நாங்கள் தவறவிட்டதே எங்களுக்கு வினையாகிவிட்டது, அந்த கேட்டை பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்