சச்சின் பிறந்தநாளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்த செயல்: கொந்தளித்த ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்
210Shares
210Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளை இன்று அவரின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில், சச்சினின் சிறந்த ஆட்டம், சிறந்த கேட்ச் என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான டேமியன் பிளம்மிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.

அந்த ட்வீட் பதிவில், டேமியன் பிளம்மிங்கின் பந்துவீச்சில் டெண்டுல்கர் அவுட் ஆகும் பழைய வீடியோ உள்ளது. இந்த விடயம் சச்சின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவுஸ்திரேலிய அணியை புரட்டியெடுக்கும் சச்சின் டெண்டுல்கரின் பல ஆட்டங்களின் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்