இந்திய கிரிக்கெட் வீரர்களின் யோ-யோ பரிசோதனை முடிவு வெளியீடு: முக்கிய வீரர் வெளியேற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்
433Shares
433Shares
lankasrimarket.com

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் விளையாடும் உடல் தகுதியை முகமது சமி பெறாததால், இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களின் உடல்தகுதியை கருத்தில் கண்டு, வீர்களின் உடல்தகுதியை பரிசோதிக்க யோ-யோ உடற்தகுதி பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது.

முதலில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் சுற்றுப்பயணத்துக்கு செல்லும் வீரர்களுக்கு மட்டும் யோ-யோ பரிசோதனை கட்டாயம் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பின் ஆப்கானிஸ்தான் உடன் ஆடும் அணிக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இதனால் இதற்கான சோதனை சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. பரிசோதனையில் ஒவ்வொரு வீரரும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணான 16.1 ஐ பெற வெண்டும். இதில், தகுதி பெறாதவர்கள் வெளியேற்றப்படுவர்.

இந்நிலையில், யோ யோ பரிசோதனை மேற்கொண்ட வீரர்களுக்கு நேற்று முடிவு வெளியிடப்பட்டது. அதில் அனைத்து வீரர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். காயம் காரணமாக விருதிமான் சஹா மட்டும் வெளியேறினார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தகுதிபெறவில்லை, அவருக்கு பதிலாக டெல்லி வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா ஏ அணியில், சஞ்சு சாம்சன், தேர்ச்சி பெறாமல் வெளியேற்ற பட்டார். இதனால் கீப்பிங் செய்ய பாரத் முடிவு செய்யப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர் இருவரும் இந்தியா ஏ அணியை வழிநடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்