ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் படைத்த சாதனை

Report Print Kavitha in கிரிக்கெட்

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 57 டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

இன்றைக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் ஜாகீர் கான் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார்.

தற்போது அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி ஜாகீர் கானை ஐந்தாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி சாதனை படைத்து விட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers