இங்கிலாந்தை பேசி வைத்தது போல் அடித்து நொறுக்கிய ரோகித்- கோஹ்லி: கதிகலங்கி போன பந்து வீச்சாளர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
434Shares
434Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினர். ஜேசன் ராய் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

குல்தீப் யாதவ் தொடர்ந்து ஜோ ரூட்டையும், பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். ஜோஸ் பட்லர் 53 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.

அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ஓட்டங்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ஓட்டங்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக திகழ்ந்த குல்தீப் யாதவ் 10 ஓவா்களில் 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு உதவினார்.

269 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான தவான், ரோகித் ஷர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

27 பந்துகளில் 40 ரன்கள் சோ்த்த தவான் மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து இறங்கிய விராட் கோஹ்லி ரோகித்துடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென எகிறியது. 269 ஓட்டங்கள் எடுக்க இந்திய அணி திணறும் என்று எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை கோஹ்லி, ரோகித் சிறப்பாக எதிர்கொண்டனர்.

இருவரின் ஆட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

ஒரு வழியாக கோஹ்லி 82 பந்துகளில் 75 ஓட்டங்களில் வெளியேறிய போது தொடா்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் ஷா்மா 114 பந்துகளில் 137 ஓட்டங்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

இறுதியாக இந்திய அணி 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் அடுத்த போட்டி சனிக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்