இங்கிலாந்தில் விளையாட இருப்பது கொஞ்சம் பதட்டமாக உள்ளது: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

Report Print Kabilan in கிரிக்கெட்

10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய டெஸ்ட் அணியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக சாஹா விலகியதால், தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து, சாஹாவின் காயம் குணமாகாததால் இங்கிலாந்து தொடரிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘10 ஆண்டு இடைவெளிக்கு பின் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் கொஞ்சம் பதட்டமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.

இருந்தாலும் அதை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சவாலானது. 2007ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு அதிகமாக மனதில் இல்லை.

ஆனால், இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே உரசலும், வாக்குவாதங்களும் ஏற்பட்டது. டிரண்ட்பிரிட்ஜில் நடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானை அவுட் ஆக்க வேண்டும் என்பதற்காக, Pitch-யில் ஜெல்லி மிட்டாய்களை இங்கிலாந்து வீரர்கள் போட்டு கடுப்பேற்றினர்.

இதனால் ஜாகீர்கான் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர்களுக்கு பதிலடி கொடுத்த ஜாகீர்கான், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நாட்டிங்காமில் தோல்வியடைய இருந்த போட்டியில் டிரா செய்தோம்.

ஓவலில் நடந்த போட்டியில் கும்ப்ளே சதம் அடித்தார். அந்தப் போட்டியை டிரா செய்தோம். அந்த நினைவுகளோடு இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துள்ளேன். அணித்தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...