இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த அஸ்வின்: குக்கை தொடர்ந்து தன்னுடைய சுழலில் மிரட்டும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் குக்கை 2016-ஆம் ஆண்டு அஸ்வின் எப்படி அவுட்டாக்கினாரோ, அதே போன்று தான் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அவுட்டாக்கியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ரூட் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அந்தணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு தலைவர் விராட் கோஹ்லி அற்புதமான சாதனை சதம் அடிக்க முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்கள் எடுத்தது.

13 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி கொடுத்தார் தமிழவீரர் அஸ்வின். அவர் வீசிய 3-வது ஓவரிலே குக் அவுட்டாகி வெளியேறினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டும் அஸ்வின் பந்து வீச்சில் குக் இதே போன்று தான் அவுட்டானார். தற்போதும் அதே பந்தில் தான் அவுட்டாகியுள்ளார். தொடர்ந்து குக்கை தன்னுடைய பந்து வீச்சின் மூலம் அஸ்வின் மிரட்டி வருகிறார்.

மேலும் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில் முதல்நாளில், அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார்.

முன்னதாக முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இதே போல இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாம் கரன், வெறும் 8 பந்து இடைவேளையில் இந்திய அணி வீரர்களான முரளி விஜய், தவான், ராகுல் ஆகியோரை அவுட்டாக்கி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்