இப்படி செய்யலாமா! வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட அஸ்வின்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தனது பந்துவீச்சு யுக்திகளை வெளிப்படுத்தியதால் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்களில் இங்கிலாந்தும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், அடுத்த 2 டெஸ்ட்களில் பெரிய அளவில் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

இந்நிலையில், அஸ்வின் குறித்து கவாஸ்கர் மற்றும் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் இயான் வார்ட், மிகவும் அருமையாக பந்துவீசிய அஸ்வினிடம் சென்று என்னென்ன யுக்திகளை பயன்படுத்தி இங்கிலாந்தை நிலையகுலைய வைத்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது அஸ்வினும் தனது அனைத்து யுக்திகளையும் விரிவாக கை அசைவுகளுடன் செய்து காட்டியுள்ளார். அந்த பேட்டியின் காட்சிகளை இங்கிலாந்து அணி நிச்சயம் பயன்படுத்தி இருக்கும் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருந்த நிலையில், அஸ்வின் இது போல தன் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது. அவர் செய்தது, ஒரு மேஜிக் நிபுணர் தன் ரகசியங்களை மேடையில் சொல்வது போல தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்