நான் இதற்கு எல்லாம் தயங்கமாட்டேன்! இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் மலிங்கா அதிரடி

Report Print Santhan in கிரிக்கெட்
359Shares
359Shares
lankasrimarket.com

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணிகளுக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் நாளை துவங்கவுள்ளது.

இதில் முதல் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்தது.

இந்த தொடரில் இலங்கை அணியிலிருந்து நீண்டகாலமாக ஓரங்கட்டப்பட்டிருந்த மலிங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, இலங்கை கிரிக்கட்டில் முறைகேடுகள் இடம்பெற்றால் தாம் அது குறித்து மௌனமாக இருக்கப்போவதில்லை.

தமது உடலைக்காட்டிலும் மனம் வலிமையானது. ஊழல்கள் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்த தாம் தயங்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்