இனிமே தினேஷ் கார்த்திக் தேவையில்லை: தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Report Print Kavitha in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இனிமேல் தினேஷ் கார்த்திக் தேவையில்லை என்று தேர்வுக்குழு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

இந்திய ஏ அணி நியூஸிலாந்தில் விளையாடவுள்ளது. அதற்கான இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை.

தினேஷ் கார்த்திக் விளையாடிய அனைத்து போட்டிகளில் கிடைத்த குறுகிய வாய்ப்புகளையும் வீணடித்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தினேஷ் கார்த்திக் மே.இ. மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு தொடர்களிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தினேஷ் கார்த்திக் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்புண்டா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தன்னை மீண்டும் நிரூபிக்க தினேஷ் கார்த்திக்குக்கு இந்த இரு தொடர்கள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...