அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அத்துடன் ரிஷாப் பண்ட்டிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
எனினும், துடுப்பாட்ட வீரராக தினேஷ் கார்த்திக் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த கோஹ்லி தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும் அவர் அணித்தலைவராக செயல்பட உள்ளார். துணைத் தலைவராக ரோஹித் ஷர்மா பொறுப்பை ஏற்க உள்ளார். மேலும் அனுபவ வீரர் உமேஷ் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் கலீல் அஹமது இடம் பிடித்துள்ளார்.
சஹால் 12வது வீரராக இடம் பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் களமிறங்குவது கடினம் என்று கூறப்படுகிறது.

12 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி
- ரோஹித் ஷர்மா
- ஷிகர் தவான்
- விராட் கோஹ்லி
- கே.எல்.ராகுல்
- ரிஷப் பண்ட்
- தினேஷ் கார்த்திக்
- க்ருணால் பாண்டியா
- குல்தீப் யாதவ்
- புவனேஷ்வர் குமார்
- பும்ரா
- கலீல் அஹமது
- சஹால்(12வது வீரர்)