விராட் கோஹ்லியின் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்: வெளியிட்ட புகைப்படம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது கிறிஸ்துமஸ் விருந்து எனக் கூறி கையில் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, பாக்ஸிங் டேவான நாளை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், கிறிஸ்துமஸை கொண்டாடும் வகையில் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கையில் கேக்குகள் நிறைந்த தட்டுடன் நிற்கிறார். மேலும் இது தனது கிறிஸ்துமஸ் விருந்து என்றும், இது உங்களுடையது என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்றும் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்