வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலியா அணி செய்த மட்டமான பவுலிங்! கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்காக பந்தை உருட்டி விட்டது கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் பென்சன் & ஹெட்ஜ்ஸ் உலக சீரியஸ் கோப்பை தொடருக்கான போட்டியில் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 236 ஓட்டங்களை நியூசிலாந்து அணி துரத்திய போது, அந்தணிக்கு கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது, ஆனால் 6 ஓட்டங்கள் அடித்தால் போட்டி டையில் முடிந்துவிடும் என்பதால், இப்போட்டியில் ஜெயிப்பதற்கு அவுஸ்திரேலியா வீரர்கள் திட்டம் போட்டனர்.

அதன் படி, அப்போதைய அவுஸ்திரேலியா கேப்டன் கிரேக் சாப்பல், தனது சகோதரர் டிரெவரை, அண்டர் ஆர்ம் (பந்தை உருட்டி விடுவது) பவுலிங் செய்யும் படி தெரிவித்தார். இதனால், எதிரில் இருந்த பேட்ஸ்மேனால் அடிக்க முடியாததால், அவுஸ்திரேலியா அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது சர்வதேச கிரிக்கெட் உலகையே அதிர்ச்சி அடையச்செய்தது. ஆனால் அப்போது அண்டர் ஆர்ம் முறையில் பவுலிங் செய்வது நடைமுறையில் இருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னரே விதிமுறைகள் மாற்றப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்