கையில் கொடி ஏந்தி டோனியிடம் ஓடிவந்து ரசிகர் செய்த செயல்! நெகிழ்ச்சியில் ஆழ்ந்த மைதானம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ரசிகர் ஒருவர் கையில் கொடியுடன் வந்து டோனியின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து-இந்தியா அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்தப் போட்டி டோனிக்கு 300வது டி20 போட்டியாகும். இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில், டோனி கீப்பிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் மைதானத்திற்கு கையில் தேசியக்கொடியுடன் ஓடி வந்தார். டோனியின் காலில் விழுந்த அந்த ரசிகர், தேசியக்கொடியை கீழே வைக்க போனார்.

உடனே டோனி கொடியை பறித்துக் கொண்டார். எனினும் அந்த ரசிகர் தனது சட்டையினால் டோனியின் ஷூக்களை துடைத்துவிட்டு உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஓடினார். இச்சம்பவம் மைதானத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers