டிம் பெய்ன்-க்கும் தொற்றியதா மறதி நோய்…!

Report Print Abisha in கிரிக்கெட்

ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் ஆட வந்த போது, ஒரு கையில் க்ளவுஸுடனும் மற்றொரு கையில் க்ளவுஸை மறந்துவிட்டும் வந்த வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் பறக்கவிட்டுள்ளது.

ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் ஆட வந்த போது, ஒரு கையில் க்ளவுஸுடன் ஆடவந்தார். மற்றொரு க்ளவுஸை மறந்துவிட்டார்.

பின்னர் மைதானத்துக்குள் வந்ததும் ஞாபகம் வர பெவிலியனை நோக்கி ஒருவரை எடுத்து வர சொல்லி அணிந்து சென்றார். இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


வர்ணனையாளர்கள் இதனை பயன்படுத்தி வர்ணிக்க துவங்கிவிட்டனர், அதில்” இதுபோன்ற நிகழ்வை தாங்கள் கண்டதில்லை" என்றனர்.

முன்னதாக இதுபோன்ற நிகழ்வு மார்ச் 2017ம் ஆண்டு நடைபெற்றது. ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஃபவத் அகமது பேட்டையே மறந்து வைத்துவிட்டு ஆடவந்தார். அதுவும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்