ஆரத்தி தட்டுக்கு ரூ.2,000 பணம்: கனிமொழி மீது வழக்கு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக தூத்துக்குடி மக்ககவை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழி உட்பட 8 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் மக்களவைத் தொகுதியில் தி.மு.க., சார்பில் மாநிலங்களவை எம்.பி-யும் மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வேட்பாளர் கனிமொழி வாக்காளர்களைச் சந்திக்கும்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவருடன் வரும் தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு ரூ.2,000 கொடுப்பதுபோல உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பாக வீடியோவுடன் செய்தியும் வெளியானது. இதற்கிடையே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல் பறக்கும்படை அதிகாரி புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி உட்பட 8 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...