சிக்ஸ் லைனில் பறந்து கேட்ச் பிடித்து அக்சர் பட்டேலிடம் தூக்கி எறிந்த இங்ராம்..நொந்து போய் வெளியேறிய கெய்ல் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சிக்ஸருக்கு அடித்த பந்தை இங்ராம் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரால் கெய்ல் அவுட்டாகிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இப்போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 164 ஓட்டங்களை அசால்ட்டாக எட்டிப் பிடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் அரைசதத்தை கடந்து அதிரடியை காட்டிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 12.2-வது பந்தை அவருக்கு சிக்ஸருக்கு அடித்த போது, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த இங்ராம் அற்புதமாக கேட்ச் செய்து, உடனடியாக அக்சர் பட்டேலிடம் தூக்கி போட, அதை அக்சர் பட்டேல் கேட்ச் பிடித்து கெய்லை அவுட்டாக்கினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்