இந்த 3 பந்துவீச்சாளர்கள் தான் உலகக்கோப்பையில் மிரட்டுவார்கள்! அவுஸ்திரேலிய புயல் பிரெட் லீ

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்புயல் பிரெட் லீ, இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படப் போகும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் இந்தியாவின் பும்ரா ஆகியோர் தான் இந்த உலகக்கோப்பையில் மிரட்டுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் பும்ராவை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

Shivkumar Pushpakar

பும்ரா குறித்து பிரெட் லீ கூறுகையில், ‘அவரிடம் நல்ல சாதனைகள் உள்ளன. அருமையான யார்க்கர் உள்ளது. நல்ல வேகம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தில் உள்ள பும்ரா, இதுவரை 49 போட்டிகளில் 85 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

AP

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 75 போட்டிகளில் 145 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 48 போட்டிகளில் 82 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Michael Dodge/Cricket Australia/Getty Images

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்