உலகக் கோப்பையில் இதெல்லாம் வேலைக்கே ஆகாது: இலங்கை வீரர் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் பேட்டியில் அதிரடி ஆட்டத்தால் வெற்றிப்பெற முடியாது என இலங்கை துடுப்பாட்டகாரர் லஹிரு திரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்பான நேர்காணலில் பேசிய திரிமான்ன, ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதின் மூலம் விரைவாக ஓட்டங்கள் சேர்ப்பது இப்போது வழக்கமாகவிட்டது.

இதன் காரணமாக 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் 300 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்கள் பெறுவது அரிதான விடயமாக மாறியிருக்கிறது. எனினும், அடித்தாடும் உக்திகள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் வெற்றிக்கான வழியாக இருக்காது என திரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் விளையாட 50 ஓவர்கள் இருக்கிறது. இது ஒரு நீண்ட போட்டி, 300 பந்துகளை நாம் சந்திக்க வேண்டும் என திரிமான்ன தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த உலகக் கோப்பையில் எந்த புதுவிதமான ஷாட்களையும் நான் முயற்சி செய்யவில்லை. எனது போட்டித் திட்டங்களுடன் மாத்திரம் இருக்கின்றேன். ஆனால், சந்தர்பங்கள் கிடைத்தால் புது ஷாட்களை விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்