பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் வெற்றி: வரலாற்றை தக்கவைத்துக்கொண்ட இந்திய அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கிண்ணம் போட்டியின் 22வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியினை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் திரண்டிருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது.

நிதானமாக விளையாடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 57(78), ரோகித் சர்மா 140(113) அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 335 ரன்கள் குவிந்திருந்தது.

36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன.

இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால், 30 பந்துகளில் 136 எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது. அந்த நேரத்திலும் கூட சிறப்பாக விளையாடிய இமாத் வாசிம் 46(39) ரன்களும், சதாப் கான் 20(14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கெதிரான தன்னுடைய வெற்றியினை மீண்டும் பதிவு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers