பாகிஸ்தான் போட்டியில் தமிழக வீரரின் உச்ச கட்ட சாதனை... அதற்கு கோஹ்லி செய்த ரியாக்‌ஷன்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விஜய்சங்கர் முதல் பந்திலே விக்கெட் எடுத்து சாதனை படைத்த நிலையில், அதற்கு கோஹ்லி கொடுத்த ரியாக்‌ஷன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசியபோது, 4-வது பந்தில், தசை பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் அவர் பாதியிலே வெளியேற்றப்பட்டார். அதன் பின் மீதமிருந்த 2 பந்துகள் வீச, தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறிக் கொண்டிருந்த போது, அந்த ஓவரை போட வந்த விஜய்சங்கர் வந்த முதல் பந்திலேயே, இமாம் உல்-ஹக் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் எடுத்து அசத்தினார்.

இந்த விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் உலகக்கோப்பையில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார்.இதற்கு முன் இந்திய அணியில் யாரும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை.

இதற்கிடையில் விஜய் சங்கரை பாராட்டி கோஹ்லி கொடுத்த ரியாக்ஷன் போட்டோதான் இப்போது வைரலாகியுள்ளது.

அதை பார்க்கும் போது, பார்றா.. இவரெல்லாம் முதல் பால்ல விக்கெட் எடுக்குறாரு, என கையை காட்டி, சக வீரர்களிடம் கிண்டல் செய்வதைப் போல அந்த போஸ் இருந்தது. இதை எந்த மாதிரி சூழ்நிலைக்கும் பயன்படுத்தலாம் என்பதால் மீம் கிரியேட்டர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers