இங்கிலாந்துடன் மோசமான தோல்வி.... ஹார்திக் பாண்ட்யாவை இறக்காமல் ரிஷப்பை இறக்கியதற்கு ரோகித்தின் பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் இளம் வீரர் ரிசஷ் பாண்ட் குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு ரோகித்சர்மா சொன்ன பதில் அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின, இப்போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் டோனியின் மந்தமான ஆட்டம் முன்னணி வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வீரரான ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, விஜய் சங்கர் நீக்கப்பட்டிருந்தார்.

ஆனால் நேற்று அவர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 29 பந்துகளை சந்தித்த அவர் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.

இந்நிலையில் இது குறித்த பத்திரிக்கையாளரின் சந்திப்பின் போது, துணை தலைவர் ரோகித்சர்மாவிடம், இந்திய அணி 146 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இருந்த போது, திடீரென்று உலகக்கோப்பை தொடரில் அனுபவமில்லாத ரிஷப்பாண்டை அந்த சமயத்தில் இறக்கவிட்டு, அனுபவம் வாய்ந்தவரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருபவருமான பாண்ட்யாவை ஏன் இறக்கவில்லை என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரோகித்சர்மா சற்று நிமிடம் பேசாமல் இருந்துவிட்டு, அதன் பின் நீங்கள் தான்(ரசிகர்கள்) பாண்ட் எங்கே, பாண்ட் வேண்டும் என்று கூறினீர்கள், தற்போது அவர் 4-வது வீரராக இறக்கிவிடப்பட்டார் என்று கூற, அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ரோகித், பாண்ட் எப்படி விளையாடினார் என்பதையே மறைமுகமாக இப்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...