மிகப்பெரிய விலையை கொடுத்துவிட்டோம்! புலம்பும் பாகிஸ்தான் கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியும் அரையிறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தனது கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. எனினும், அரையிறுதி வாய்ப்பு இழந்து தொடரை விட்டு வெளியேறியது.

ரன் ரேட்டில் நியூசிலாந்தை விட பாகிஸ்தான் அணி பின் தங்கி இருந்தது. எனவே, நியூசிலாந்து அணி 4வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் கூறுகையில்,

‘உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்குள் நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஒரு ஆட்டம் எங்களை மாற்றி விட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மோசமாக ஆடியதால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்களது துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையும் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், ஹாரிஸ் சோகைல் ஆகியோரும், பந்துவீச்சில் அமீர், சதாப், வகாப், ஷகீன் அப்ரிடி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். நான் பார்த்த சிறந்த பந்துவீச்சு இதுவாகும்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்