டோனியின் ரன்-அவுட்.. அதிர்ச்சியில் பேச முடியாமல் உறைந்துபோன கங்குலி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டோனி ரன்-அவுட் ஆனதைப் பார்த்து, வர்ணனை செய்துகொண்டிருந்த கங்குலி ஒன்றும் பேசாமல் உறைந்துபோன வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் நகரில் நடந்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து.

இந்திய அணியின் தோல்வியை விட, டோனி ரன்-அவுட் ஆனது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

அவர் இந்திய அணியை வழிகாட்டும் விதமாக வர்ணனையில் நிறைய அறிவுரைகளை வழங்கி வந்தார். ஆனால், டோனி 7வது வீரராக களமிறங்கியது அவரை கோபத்தில் ஆழ்த்தியது. டோனியை தாமதமாக களமிறக்கியதே அவரது கோபத்திற்கு காரணம்.

எனினும், டோனியின் ஆட்டத்தை அவர் பாராட்டி வந்தார். இந்நிலையில் டோனி ரன்-அவுட் ஆன போது, கங்குலி எதுவுமே பேசாமல் அப்படியே உறைந்துபோனார். அவர் முகத்தில் அதிர்ச்சி இருந்தது தெரிந்தது. பேச வார்த்தையில்லாமல் அவர் திணறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்