டோனி வேண்டுமென்றே நியூசிலாந்து எதிரான போட்டியில் ரன்-அவுட் ஆனார்! யுவராஜ் சிங்கின் தந்தை அதிரடி குற்றச்சாட்டு

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை மீண்டும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சீண்டும் வகையில் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவரது தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் இந்திய அணி வீரர் டோனி மீது அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்தப் போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்தில் த்ரோ செய்ததால் இந்திய வீரர் டோனி ரன்-அவுட் ஆனார்.

இந்திய அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்ததுடன், ரசிகர்களுக்கும் மிகுந்து ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில், டோனியின் ரன்-அவுட் குறித்து யோக்ராஜ் சிங் கூறுகையில், ‘டோனி வேண்டுமென்று தான் நியூசிலாந்து அணியின் targetஐ கடக்க அணிக்கு உதவவில்லை.

Nathan Stirk/Getty Images

இந்திய அணியில் தன்னைத் தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக்கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்து விடக் கூடாது என்பது தான் டோனியின் எண்ணம். துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் குண்டுகளைப் போல் ரவீந்திர ஜடேஜா ஆடி இந்தியாவின் இலக்கை நெருங்கும்போது, டோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்துவிட்டார்.

ரவீந்திர ஜடேஜா களத்துக்கு வந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் 77 ஓட்டங்களில் விளையாடும்போது, அவரிடம் போய் அதிரடி ஆட்டம் ஆடு என்று கூறுகிறீர்கள் (டோனி). முன்னதாக ஹர்திக் பாண்ட்யாவிடம் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவரில் அடித்து ஆட கூறுகிறீர்கள்.

மிஸ்டர் டோனி, நீங்கள் நிறைய ஆட்டங்களை ஆடியிருக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லையா? யுவராஜ் உங்களைப் போல எந்த வீரரிடமாவது சென்று, அதிரடியான ஆட்டத்தை ஆடு என்று கூறியிருப்பாரா?

நீங்கள் தான் பெரிய சிக்சர்களை அடிக்கிறீர்களே, அன்று உங்களுக்கு என்ன ஆனது? எது உங்களை கவலையடையச் செய்தது? நீங்கள் அவுட்டாகி வெளியேறியிருந்தால் மட்டும் என்ன வித்தியாசம் நிகழ்ந்துவிடப் போகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...