உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.. வங்கதேச பிரீமியர் லீக்கிற்கு தெரிவு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த இயான் மோர்கன், வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் டி20 லீக் தொடரில் விளையாட உள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் சங்கம் டி20 பிரீமியர் லீக் தொடர் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் டாக்கா டைனமிட்ஸ் அணிக்காக, இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டைனமிட்ஸ் அணி தலைமை நிர்வாகி கூறுகையில், ‘நாங்கள் வரவிருக்கும் தொடருக்காக மோர்கனை ஒப்பந்தம் செய்துள்ளோம். டி20 கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான அனுபவம் உள்ளதால் அவரை தேர்வு செய்தோம். அவர் தொடர் முழுவதும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டாக்கா டைனமிட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன், பொல்லார்டு, ஆப்கான் வீரர் ஹஸ்ரதுல்லா சசாய் ஆகியோரும் உள்ள நிலையில் மோர்கனின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று கொடுத்த மோர்கன், இங்கிலாந்து டி20 அணிக்கும் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers