உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்தா இப்படி? மரண அடி கொடுத்த அயர்லாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்
190Shares

லண்டனில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 85 ஓட்டங்களுக்கு சுருட்டி அயர்லாந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து அணியுடன் ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்து ஆடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய்(5) அயர்லாந்தின் முர்தாக் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த டென்லி சிறிது நேரம் தாக்குப் பிடித்தார்.

ஆனால், மறுபுறம் வந்த வீரர்கள் அடுத்தடுத்து முர்தாக்கின் தாக்குதலுக்கு இரையாகினர். பேர்ஸ்டோ, மொயீன் அலி, வோக்ஸ் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். டென்லி 23 ஓட்டங்கள் எடுத்தார்.

POPPERFOTO

கடைசி கட்டத்தில் சாம் குர்ரன்(18), ஸ்டோன்(19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தனர். அயர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 23.4 ஓவரில் 85 ஓட்டங்களுக்கு சுருண்டது. அயர்லாந்து தரப்பில் டிம் முர்தாக் 5 விக்கெட்டுகளும், மார்க் அடைர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 58.2 ஒவரில் 207 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆண்ட்ரூ பால்பிரினி 55 ஓட்டங்களும், பவுல் ஸ்டெர்லிங் 36 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டோன், சாம் குர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Reuters

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில், ஒரு ஓவரில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்